248 உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்புமனுத் தாக்கல் நாளை மறுதினம் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள நிலையில், முதன்மை அரசியல் கட்சிகள் நேற்று முதல் கட்டுப்பணம் செலுத்த ஆரம்பித்துள்ளன.ஐக்கிய தேசியக்கட்சி கொழும்பு உள்ளிட்ட மாவட்டங்களிலும், சிறிலங்கா சுதந்திரக் கட்சி மாத்தறையிலும் நேற்றுக் கட்டுப்பணம் செலுத்தின.
கடந்த நவம்பர் 27ஆம் திகதி முதல் கட்டமாக தேர்தல் அறிவிப்பு விடுக்கப்பட்ட 93 உள்ளூராட்சி சபைகளுக்குமான வேட்புமனுத் தாக்கல் நேற்றுமுன்தினம் நண்பகலுடன் நிறைவுக்கு வந்தது.
இரண்டாம் கட்டமாக டிசம்பர் 4ஆம் திகதி அறிவிப்பு விடுக்கப்பட்ட 248 சபைகளுக்கான வேட்புமனுத் தாக்கல் நாளைமறுதினம் 18ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்தச் சபைகளுக்கான கட்டுப்பணமே தற்போது செலுத்தப்பட்டு வருகின்றது.
Post a Comment