உள்ளூராட்சி சபைக்குப் பிழையின்றி வேட்புமனுவொன்றைத் தாக்கல் செய்யத் தெரியாத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிகாரத்தை எதற்குக் கோருகின்றது? இவ்வாறு ஜாதிக ஹெல உறுமய கேள்வி எழுப்பியுள்ளது.வேட்புமனுவைத் தாக்கல்செய்யத் தெரியாதவர்களுக்கு உள்ளூராட்சி சபைகளைக் கொடுப்பதற்குப் பதிலாக அபிவிருத்திகளை முன்னெடுப்பவர்களுக்கு தமிழ் மக்கள் ஆதரவளிக்கவேண்டும் என்றும் ஜாதிக ஹெல உறுமய வலியுறுத்தியுள்ளது. ஜாதிக ஹெல உறுமயவின் ஊடகப்பேச்சாளரும் மேல்மாகாண சபை உறுப்பினருமான நிசாந்த சிறிவர்ணசிங்க இது குறித்து மேலும் தெரிவித்ததாவது:
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கில் தாக்கல் செய்திருந்த இரண்டு பிரதேச சபைகளுக்கான வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. பிழையின்றி உள்ளூராட்சி சபைக்கு வேட்புமனுவைக்கூட தாக்கல்செய்ய முடியாத கூட்டமைப்பினர்தான் தமிழ் மக்களுக்கு அதிகாரத்தைக் கோருகின்றனர்.
வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் இனவாதம் பேசுபவர்களைத் தெரிவுசெய்யாது தமக்கான அபிவிருத்திகளை முன்னெடுப்பவர்களுக்கு உள்ளூராட்சி சபைகளைக் கொடுக்கவேண்டும் – என்றார்.
Post a Comment