93 உள்ளூராட்சி சபைகளுக்காக 30 அரசியல் கட்சிகளும், 49 சுயேச்சைக் குழுக்களும் தாக்கல் செய்துள்ள வேட்புமனுக்களில், 496 வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.21 மாவட்டங்களிலுள்ள 93 உள்ளூராட்சி சபைகளுக்குமான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளுதல் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை நண்பகலுடன் நிறைவுக்கு வந்தது.
அரசியல் கட்சிகளினால் 466 வேட்புமனுக்களும், சுயேச்சைக் குழுக்களினால் 57 வேட்புமனுக்களும் என்று மொத்தமாக 523 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதில், அரசியல் கட்சிகளினால் தாக்கல் செய்யப்பட்ட 19 வேட்புமனுக்களும், சுயேச்சைக் குழுக்களினால் தாக்கல் செய்யப்பட்ட 8 வேட்புமனுக்களும் நிராகரிக்கப்பட் டன.
ஐக்கிய தேசியக் கட்சியானது 92 உள்ளூராட்சி சபைகளுக்கும், சிறிலங்கா சுதந்திரக் கட்சி 25 உள்ளூராட்சி சபைகளுக்கும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 61 உள்ளூராட்சி சபைகளுக்கும், சிறிலங்கா பொதுமக்கள் முன்னணி 78 உள்ளூராட்சி சபைகளுக்கும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி 11 சபைகளுக்கும் தனித்தனியாக வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளன என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment