Ads (728x90)

உள்ளூராட்சி மன்றத்தேர்தலுக்கான இரண்டாம் கட்ட கட்டுப்பணம் செலுத்துதல் மற்றும் வேட்புமனுக்களைப் பொறுப்பேற்கும் பணி இன்று முதல் ஆரம்பமாகியுள்ளன.

248 உள்ளுராட்சி மன்றங்களுக்காக இதன் போது கட்டுப்பணமும் வேட்புமனுக்களும் பொறுப்பேற்கப்படவுள்ளன.

கட்டுப்பணத்தை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கை எதிர்வரும் புதன்கிழமை 26 ஆம் திகதி நண்பகல் 12 மணியுடன் நிறைவு பெறுகிறது.

இதேவேளை, வேட்புமனுக்களை பொறுப்பேற்கும் பணி எதிர்வரும் வியாழக்கிழமை நண்பகல் 12 மணியுடன் நிறைவுபெறும்.

17 மாநகர சபைகளுக்கும், 23 நகர சபைகளுக்கும், 208 பிரதேச சபைகளுக்குமாக இரண்டாம் கட்ட தேர்தல் பணிகள் இடம்பெறுகின்றன.

இந்நிலையில் எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இடம்பெறவுள்ளதாக சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Recent News

Recent Posts Widget