Ads (728x90)

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக  ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி இன்று மதியம் மன்னார் தேர்தல் அலுவலகத்தில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஸாட் பதியூதினின் இணைப்புச் செயலாளர் றிப்கான் பதியுதீன் தலைமையில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

இதன் போது வடமாகாண சபை உறுப்பினர் அலிக்கான் செரீப், அமைச்சரின் செயலாளர் முஜாகிர், ஐக்கிய தேசியக்கட்சியின் மாவட்ட அமைப்பாளர் ஏ.எஸ்.எம்.பஸ்மி ஆகியோரும்  சென்றிருந்தனர்.

ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகர சபை, மன்னார் பிரதேச சபை, நானாட்டான் பிரதேச சபை, முசலி பிரதேச சபை, மாந்தை மேற்கு பிரதேச சபை,  ஆகிய 5 உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிடுவதற்காக  கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

இதே வேளை மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் மாத்திரம் போட்டியிடுவதற்கு சுயேட்சை குழு ஒன்று இன்று  காலை மன்னார் தேர்தல் அலுவலகத்தில் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளது.

சுயேட்சைக்குழுவின் பொது வேட்பாளர் நிகால் நிர்மலராஜ் தலைமையில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Recent News

Recent Posts Widget