Ads (728x90)

கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி மக்களிடம் பரவலான வரவேற்பை பெற்றிருக்கிறது அருவி என்கிற திரைப்படம். அருண் பிரபு புருஷோத்தமன் என்ற இளைஞர் இயக்கி உள்ள இந்தப் படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ளார்.

 அதிதி பாலன், அஞ்சலி வரதன், முகம்மது அலி பைக் உள்பட பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் 30 சதவிகித காட்சிகள் ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியின் பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ளது. படத்தில் நிகழ்ச்சியில் தலைப்பு சொல்வதெல்லாம் சத்தியம். இதில் லட்சுமி ராமகிருஷ்ணனை இமிடேட் செய்து மலையாள நடிகை லட்சுமி கோபாலசாமி நடித்துள்ளார். படத்தில் அவரது கேரக்டரின் பொயர் ஷோபா பார்த்தசாரதி. நிகழ்ச்சி இயக்குனராக கவிதா பாரதி நடித்துள்ளார்.

அந்த நிகழ்ச்சி எப்படி படமாகிறது. நிகழ்ச்சிக்கு எப்படி ஆள் பிடிக்கிறார்கள், பாதி உண்மை பாதி நடிப்பு கலந்து எப்படி நிகழ்ச்சி உருவாகிறது. அந்த நிகழ்ச்சியின் இயக்குனர்கள், உதவி இயக்குனர்கள், பணியாளர்கள் எப்படி செயல்படுகிறார்கள் என்பதை விரிவாக அலசுகிறது படம். இந்த காட்சிகள் தியேட்டர்களில் வெடி சிரிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

இதற்கு முன்பு சில படங்களில் இந்த நிகழ்ச்சி கிண்டல் செய்யப்பட்டிருந்தாலும் இந்த அளவிற்கு யாரும் கிண்டல் செய்யவில்லை. இதனை வெறும் காமெடிக்காக வைக்காமல் படத்திற்கு மிகத் தேவையாக இருப்பதால் வைக்கப்பட்டிருக்கிறது. அதோடு தனிமனித பிரச்னைக்குள் நுழைந்து ஒரு நிகழ்ச்சி நடத்தப்படுவதையும் படம் தவறென்று சுட்டிக் காட்டுகிறது.

Post a Comment

Recent News

Recent Posts Widget