
இங்கு காலை 6:00 மணி முதல் மறு நாள் அதிகாலை வரை தொடர்ச்சியாக அன்னதானம் வழங்கப்படுகிறது. சமையல், காய்கறி வெட்டுதல் என அனைத்துமே இயந்திர மயமாக்கப்பட்டுள்ளது. நவ., 16-ம் தேதி தொடங்கிய அன்னதானம் 15 நாட்களில் 3 லட்சத்து 7 ஆயிரத்து 323 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது.
நவ., 25-ம் தேதி அதிக பட்சமாக 25 ஆயிரத்து 679 பேர் சாப்பிட்டுள்ளனர். 16-ம் தேதி குறைந்த பட்சமாக 12 ஆயிரத்து 449 பேர் சாப்பிட்டுள்ளனர். இங்கு 244 தினக்கூலி தொழிலாளர்களும், 40 சமையல் கலைஞர்கள் உட்பட 325 பேர் இங்கு பணி புரிகின்றனர். ஒரே நேரத்தில் 1,350 பேர் அமர்ந்து சாப்பிட முடியும்.
சபரிமலையில் மழை : சபரிமலையில் நேற்று லேசான மழை பெய்தது. வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. நேற்று முன்தினம் கூட்டம் குறைவாக இருந்த நிலையில் நேற்று கூட்டம் அதிகமாக இருந்தது.
Post a Comment