Ads (728x90)


கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த படம் மாங்கா. பிரேம்ஜி அமரன் ஹீரோவாக நடித்த இந்தப் படத்தில் அவந்திகா, லீமா பாபு, சாம்ஸ் உள்பட பலர் நடித்திருந்தார்கள். ஆர்.எஸ்.ராஜா என்பவர் இயக்கி இருந்தார். தற்போது இந்தப் படத்தின் தயாரிப்பாளர் வெங்கடேசன் என்பவர் பைனான்சியர் அன்புசெழியன் மீது 6 கோடி ரூபாய் மோசடி புகார் கொடுத்துள்ளார். சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலத்தில் அவர் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது:

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நான் 6 கோடி ரூபாய் செலவில் மாங்கா என்ற படத்தை தயாரித்தேன். அந்த படத்தை பைனான்சியர் அன்புசெழியனும் மற்றும் அவரது சகோதரர் அழரும், படத்தை நாங்கள் 150 தியேட்டரில் வெளியிட்டுத் தருகிறோம். லாபத்தில் 10 சதவிகிதம் கமிஷன் தர வேண்டும் என்றார்கள். நானும் அதற்கு ஒப்புக் கொண்டு படத்தை கொடுத்தேன்.

ஆனால் படம் வெளியான பிறகு வசூலான தொகையை கேட்டால், அதை கொடுக்காமல் ஆள் வைத்து எனக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். வீட்டுக்கு அடியாட்களை அனுப்பி பெண்களை மிரட்டினர். அப்போதே நான் இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் செய்தேன். அன்புசெழியனுக்கு பயந்து போலீசில் புகார் அளிக்கவில்லை. இப்போது தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் கொடுத்த தைரியத்தால் புகார் அளித்திருக்கிறேன். அன்பு செழியன் மீது நடவடிக்கை எடுத்து எனக்கு சேர வேண்டிய 6 கோடி ரூபாயை மீட்டுத்தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தனது புகார் மனுவில் தெரிவித்திருக்கிறார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget