Ads (728x90)


பாலிவுட் நடிகர் சல்மான்கான நடித்த டைகர் ஜிந்தா படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளிவந்தது. இந்த படத்தின் புரமோசன் நிகழ்வில் கலந்து கொண்ட சல்மான்கான், ஒரு குறிப்பிட்ட ஜாதியை காயப்படுத்தும் விதமாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் அந்த சாதியை சேர்ந்தவர்கள் நேற்று மும்பை பாந்த்ராவில் உள்ள சல்மான்கானின் வீட்டு முன் திரண்டு ஆர்ப்பாட்டம் நடித்தினார்கள்.

சில அரசியல் கட்சியினரும் இதில் கலந்து கொண்டனர். சல்மான்கான மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லாவிட்டால் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று அவர்கள் கோஷமிட்டனர்.

ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்ப்பூர், ஜோத்பூர் மற்றும் கோடா நகரங்களில் 'டைகர் ஜிந்தா ஹை' படம் வெளியான தியேட்டர்களை குறிப்பிட்ட அந்த சமூகத்தினர் அடித்து நொறுக்கினர். ஜெய்ப்பூரில் சல்மான்கான் போஸ்டர்களை கிழித்ததுடன், கட்-அவுட்டுகளுக்கு செருப்பு மாலை அணிவித்தனர். பிக்கானர், அஜ்மீர் மற்றும் அல்வார் உள்ளிட்ட பகுதிகளிலும் சல்மான்கான் படம் வெளியான தியேட்டர் முன்பு நூற்றுக்கணக்கானோர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேபோன்று நடிகை ஷில்பா ஷெட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது ஒரு குறிப்பிட்ட ஜாதி குறித்து கருத்து தெரிவித்திருக்கிறார். இந்த கருத்து தங்களை புண்படுத்துவதாக கூறி அந்த சமூகத்தினர் மும்பையில் ஆர்ப்பாட்ம் நடத்தினார்கள்.

இதற்கிடையில் சல்மான்கான், ஷில்பா ஷெட்டி இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய குடியரசு கட்சியின் பொதுச் செயலாளர் ரோஜ்கர் அகாரி மும்பை அந்தேரி போலீசில் புகார் அளித்துள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget