
சம்பளத்தில் பாலிவுட் மற்றும் ஹாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தான் எப்போதுமே டாப். ஒரு படத்துக்கு 7 கோடி முதல் 10 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். ஹாலிவுட் படமாக இருந்தால் நம்ம ஊர் மதிப்பின் படி 25 கோடி வாங்குகிறார். இது தவிர இப்போது ஒரு புத்தாண்டு கொண்டாட்டத்தில் 5 நிமிடம் நடனம் ஆடுவதற்கு 5 கோடி சம்பளம் பெற்று சாதனை படைத்திருக்கிறார்.
மும்பையில் 7 நட்சத்திர ஓட்டல் ஒன்றில் புத்தாண்டு கொண்டாட்டத்தை ஒரு தனியார் நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனம் நடத்துகிறது. இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள விளம்பரத்தில் பிரியங்கா சோப்ராவின் நடனத்திற்கு முக்கியத்தும் கொடுத்துள்ளது. இந்த நிகழ்ச்சி மூலம் 25 கோடி வரை திரட்ட திட்டமிட்டுள்ள அந்த நிறுவனம், பிரியங்கா சோப்ராவுக்கு 5 கோடி சம்பளம் வழங்குகிறது. பிரியங்கா சோப்ரா நடித்த படங்களில் இருந்து அந்தாக்ஷரி பாணியில் அவர் பாடல்களுக்கு நடனம் ஆடுகிறார். இந்த நடனம் 5 நிமிடம் தான் என்றாலும் இதற்கு 3 நாட்கள் ஒத்திகையில் ஈடுபட இருக்கிறார் பிரியங்கா சோப்ரா.
தற்போது அமெரிக்காவில் இருக்கும் பிரியங்கா சோப்ரா அடுத்த வாரம் இந்தியா திரும்புகிறார். "புத்தாண்டை கொண்டாட இந்தியா வருகிறேன்". என்று அவர் இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார். பிரியங்காவுடன் ரன்வீர் சிங், சாகித் கபூர், நடிகைகள் கத்ரீனா கைப், ஜாக்குலின் பெர்ணான்டஸ் ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் ஆட இருப்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment