Ads (728x90)

நடைபெறவுள்ள உள்ளூராட்சிசபைத் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைக்கப்படவுள்ள 521 வாக்களிப்பு நிலையங்களிலும் வாக்கு எண்ணும் பணிகள் இடம்பெறவுள்ளன. ஆனால் 243 நிலையங்களிலேயே, வட்டாரத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்களின் விவரங்கள் அறிவிக்கப்படும் என்று தேர்தல்கள் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்தன.

பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில், யாழ்ப்பாண மாவட்டத்தில் 521 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.

வலி. வடக்கு பிரதேச சபை எல்லைப் பரப்பில் 65 வாக்களிப்பு நிலையங்களும், யாழ்ப்பாணம் மாநகர சபையின் எல்லைப் பரப்பில் 52 வாக்களிப்பு நிலையங்களும், வல்வெட்டித்துறை நகர சபை எல்லைக்குள் 12 வாக்களிப்பு நிலையங்களும், பருத்தித்துறை நகர சபை எல்லைக்குள் 10 வாக்களிப்பு நிலையங்களும், சாவகச்சேரி நகர சபை எல்லைக்குள் 11 வாக்களிப்பு நிலையங்களும், காரைநகர் பிரதேச சபை எல்லைக்குள் 14 வாக்களிப்பு நிலையங்களும், ஊர்காவற்றுறைப் பிரதேச சபை எல்லைக்குள் 16 வாக்களிப்பு நிலையங்களும் அமையவுள்ளன.

நெடுந்தீவுப் பிரதேச சபை எல்லைக்குள் 8 வாக்களிப்பு நிலையங்களும், வேலணைப் பிரதேச சபை எல்லைக்குள் 27 வாக்களிப்பு நிலையங்களும், வலி. மேற்கு பிரதேச சபை எல்லைக்குள் 36 வாக்களிப்பு நிலையங்களும், வலி. தென்மேற்குப் பிரதேச சபை எல்லைக்குள் 36 வாக்களிப்பு நிலையங்களும், வலி. தெற்கு பிரதேச சபை எல்லைக்குள் 35 வாக்களிப்பு நிலையங்களும், வலி. கிழக்கு பிரதேச சபை எல்லைக்குள் 49 வாக்களிப்பு நிலையங்களும், வடமராட்சி தென் மேற்கு பிரதேச சபை எல்லைக்குள் 47 வாக்களிப்பு நிலையங்களும் அமைக்கப்படவுள்ளன.

பருத்தித்துறை பிரதேச சபை எல்லைக்குள் 33 வாக்களிப்பு நிலையங்களும், சாவகச்சேரி பிரதேச சபை எல்லைக்குள் 41 வாக்களிப்பு நிலையங்களும், நல்லூர் பிரதேச சபை எல்லைக்குள் 29 வாக்களிப்பு நிலையங்களுமாக மொத்தம் 521 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.

யாழ்ப்பாணம் 243 வட்டாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொரு வட்டாரத்திலும் வெற்றி பெற்றவர்களது விசரங்கள், தனித்தனி வாக்களிப்பு நிலையங்களில் எண்ணப்பட்டு ஒன்று சேர்க்கப்பட்டே அறிவிக்கப்படும் என்று தேர்தல்கள் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்தன.

Post a Comment

Recent News

Recent Posts Widget