
சிறிலங்கா பொதுமக்கள் முன்னணி (மகிந்த அணி), சிறிலங்கா சுதந்திரக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தமிழர் விடுதலைக் கூட்டணி, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகளினதும், சில சுயேச்சைக் குழுக்களினதும் வேட்புமனுக்களே நிராகரிக்கப்பட்டுள்ளன.
சிறி லங்கா பொது மக்கள் முன்னணியின் வேட்புமனுக்கள் 6 இடங்களில் நிராகரிக்கப்பட்டுள்ளமை மகிந்த அணிக்குப் பெரும் தலையிடியை ஏற்படுத்தியுள்ளது. பதுளை, மகியங்கனை, அகலவத்த ஆகிய பிரதேச சபைகளுக்காகவும், மகரகம, பாணந்துறை, வெலிகம ஆகிய நகரசபைகளுக்காகவும் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
தெஹியத்தகண்டிய மற்றும் பதியத்தலாவ ஆகிய பிரதேச சபைகளுக்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சியால் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அக்கறைப்பற்று நகர சபைக்கான வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளன.
உரிய காலத்தினுள் வேட்புமனுக் கையளிக்கப்படாமை, பெயர் குறிக்கப்படவேண்டிய வேட்பாளர்களின் எண்ணிக்கை உள்ளடக்கப்படாமை, பெண் வேட்பாளர்களுக்கான ஒதுக்கீடு முழுமைப்படுத்தப்படாமை, அரசியல் கட்சியாக இருந்தால் செயலரும், சுயேச்சைக்குழுவாக இருந்தால் அதன் தலைவரும் கையொப்பமிடாமை, விதிக்கப்பட்ட கட்டுப்பணம் செலுத்தாமை, வேட்பாளர் கையொப்பமிடாமை உட்பட 6 காரணங்களால் வேட்புமனு நிராகரிக்கப்படும் எனத் தேர்தல் ஆணைக்குழு அறிவித்திருந்தது.
இதற்கமையவே மேற்படி வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
Post a Comment