Ads (728x90)

அறிமுக இயக்குனர் கல்யாண் இயக்கத்தில் பிரபுதேவா, ஹன்சிகா மற்றும் பலர் நடிக்க உருவாகி வரும் 'குலேபகாவலி' படம் பொங்கலுக்கு வெளியாகும் என அப்படத்தைத் தயாரித்துள்ள கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

நயன்தாரா நடிக்க சமீபத்தில் வெளிவந்து வெற்றி பெற்ற 'அறம்' படத்திற்குப் பிறகு இந்நிறுவனத்தின் இரண்டாவது படம் இது. நயன்தாராவின் மேலாளர் என்று சொல்லப்படும் கோட்டபாடி ஜே. ராஜேஷ் தான் கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

'குலேபகாலி' படத்தின் முதல் பார்வை போஸ்டர்களில் அந்தக் கம்பெனியின் பெயர் இருக்கிறது. அப்போது அது பற்றி பலருக்கும் தெரியவில்லை. ஆனால், 'அறம்' படத்திற்குப் பிறகு அந்த நிறுவனம் பிரபலம் ஆகியுள்ளது. அந்த நிறுவனத்தின் தயாரிப்பில் பிரபுதேவா எப்படி நடித்துள்ளார் என்பதுதான் இன்றைய ஆச்சரியம்.

நயன்தாராவும், பிரபுதேவாவும் ஒரு காலத்தில் காதலர்களாக இருந்தார்கள். பிரபுதேவாவுக்காக நயன்தாரா இந்து மதத்திற்கும் மாறினார். அதன் பின் அந்த காதல் விவகாரம் அப்படியே அமுங்கிப் போனது.

Post a Comment

Recent News

Recent Posts Widget