வேட்பு மனு நிராகரிக்கப்பட்டவர்கள் மீளவும் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்ய முடியாது என்று தேர்தல் ஆணைக் குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.மகரகம, பதுளை, அகலவத்தை, பாணந்துறை, வெலிகம, மகியங்கனை போன்ற உள்ளூராட்சி மன்றங்களுக்காக சிறிலங்கா பொதுமக்கள் முன்னணி தாக்கல் செய்த வேட்பு மனுக்களும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியினால் பதியதலாவ, தெகியத்தகண்டிய ஆகிய பிரதேச சபைகளுக்கு தாக்கல் செய்த வேட்பு மனுக்கள் உள்ளிட்ட 22 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட் டுள்ளன.
வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப் போவதாக மகிந்த அணி தெரிவித்திருந்தது. இவ்வாறானதொரு நிலையிலேயே தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
Post a Comment