Ads (728x90)

யாழ்ப்­பா­ணம் மாந­கர சபைக்­கான மேயர் வேட்­பா­ள­ராக இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்சி சார்­பில் வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் இம்­மா­னு­வேல் ஆர்னோல்ட் நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். இதை­ய­டுத்து அவர் வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் பத­வி­யி­லி­ருந்து வில­கும் கடி­தத்தை, அவைத் தலை­வர் சி.வி.கே.சிவ­ஞா­னத்­தி­டம் நேற்­றுக் கைய­ளித்தார்.

வடக்­கில் உள்ள ஒரே ஒரு மாந­கர சபை­யான யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை­யின் தலை­வர் பதவி இரா­ஜ­தந்­திர மதிப்­புள்ள ஒரு பதவி. யாழ். மாவட்­டத்­தி­ன் அடை­ யா­ள­மா­க­வும் விளங்­கக்­கூ­டி­யது. இத்­த­கைய பெருமை மிகு பத­வியை அடை­வ­தற்­கான முயற்­சி­யில் பல­ரும் போட்­டி­யிட்டு வந்­த­னர்.

தமிழ் அர­சுக் கட்­சிக்­குள்­ளும் பலத்த போட்டி நில­வி­யது. யாழ்ப்­பா­ணம் வணி­கர் கழக முன்­னாள் தலை­வ­ரும் தற்­போது மாகாண சபை உறுப்­பி­ன­ராக உள்­ள­வ­ரு­மான இ.ஜெய­சே­க­ரம், முன்­னாள் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சொல­மன் சூ.சிறில், முன்­னாள் மாந­கர சபை உறுப்­பி­னர் இரா­ஜ­கு­ரு­தே­வன், ஊட­க­வி­ய­லா­ளர் ந.வித்­தி­யா­த­ரன் ஆகி­யோர் இந்­தப் போட்­டி­யில் இருந்­த­னர்.
எனி­னும் யாழ். மாந­கர சபைக்­குள் வாழக்­கூ­டிய மக்­க­ளின் பகுப்­பாய்வு அடிப்­ப­டை­யில் ஆர்­னோல்ட் தெரிவு செய்­யப்­பட்­டார் என்று கட்சி வட்­டா­ரங்­கள் தெரி­வித்­தன.

யாழ். மாந­கர சபைத் தேர்­த­லில் போட்­டி­யி­டு­வ­தற்கு வச­தி­யாக வடக்கு மாகாண உறுப்­பி­னர் பத­வி­யில் இருந்து வில­கும் கடி­தத்தை ஆர்­னோல்ட் நேற்று இரவு கைய­ளித்­தார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget