
இலங்கையில் சீன அரசாங்கத்தினால் நிர்மாணிக்கப்பட்டு வரும் கொழும்புத் துறைமுக நகர் திட்டத்தின் ஒரு கட்டமாக கொழும்பு – கொள்ளுப்பிட்டி புகையிரத நிலையத்தில் இருந்து கொழும்பு சைத்திய வீதி வரையில் துறைமுக நகரம் ஊடாக பிரவேசிக்கின்ற நிலக்கீழ் கடல் வீதி மார்க்கத்தினை நீடிக்கும் வேலைத்திட்டத்தினை துறைமுக நகர வேலைத்திட்ட நிறுவனத்துடன் இணைந்து அரச தனியார் ஒத்துழைப்பு வேலைத்திட்டமாக செயற்படுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இலங்கை அரசாங்கம் கைச்சாத்திடவுள்ளது.
இது குறித்து பாரிய நகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்கவினால் முன்வைக்கப்பட்டுள்ள அமைச்சரவை பத்திரம் அமைச்சரவையில் அங்கீகாரம் பெற்றுள்ளது.
அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் இருந்து இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்க தயாராகி வருவதாகவும், துறைமுக நகர் நிரப்பு வேலைகள் முடிவுக்கு வந்தவுடன் அடுத்த கட்டமாக நிலக்கீழ் பாதையினை அமைக்கும் முதற்கட்ட நகர்வுகள் இடம் பெறும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
Post a Comment