Ads (728x90)


தாய­கத்­தில் தற்­போ­துள்ள அர­சி­யல் நிலை­மை­க­ளைக் கருத்­திற் கொண்டு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பைப் பலப்­ப­டுத்­தும் நோக்­கு­டன் அத­னு­டன் இணைந்து போட்­டி­யி­ட­வுள்­ளோம் என்று ஜன­நா­ய­கப் போரா­ளி­கள் கட்சி தெரி­வித்­தது.
தமி­ழ­ர­சுக் கட்­சி­யின் யாழ்ப்­பா­ணம் மார்ட்­டீன் வீதி­யில் உள்ள அலு­வ­ல­கத்­தில் நேற்று நடத்­தப்­பட்ட ஊட­க­வி­ய­லா­ளர் சந்­திப்­பில் அந்­தக் கட்­சி­யின் சார்­பில் கலந்­து­கொண்ட வேந்­தன் இவ்­வாறு தெரி­வித்­தார்.

அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது-:
நடை­பெ­ற­வுள்ள தேர்­தல் தேசி­யத்­தைப் பெறு­வ­தற்­கா­னது அல்ல. அபி­வி­ருத்­தியை இலக்­கா­கக் கொண்ட தேர்­தல். இந்­தத் தேர்­த­லில் பல குழுக்­க­ளா­கப் பிரிந்து நின்று போட்­டி­யிட்டு தாய­கத்­தைப் பிள­வு­டுத்­தக் கூடாது. அதற்­கா­கவே நாம் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பில் இணைந்து போட்­டி­யி­டு­கின்­றோம். ஆயு­தப் போராட்­டத்­தின்­போது தமிழ் மக்­களாகப் பலம் பொருந்­தி­யி­ருந்­தோம். அவ்­வா­றான நிலைமை இப்­போது இல்லை. அர­சி­யல் பலம் மாத்­தி­ரமே உள்­ளது.
அர­சி­ய­லில் நாம் பிரிந்து நிற்­காது தேசிய பலத்தை பன்­னா­டு­க­ளுக்­கும், இலங்கை அர­சுக்­கும் காட்ட வேண்­டும். அதன் ஊடாக நாம் பேரம் பேசும் சக்­தியாக உரு­வாக முடி­யும். தற்­போது தமிழ்க் கூட்­ட­மைப்­பில் இணைந்­துள்­ளோம். கூட்­ட­மைப்­பில் எவர் பிழை செய்­தா­லும் தட்­டிக் கேட்­போம் – என்­றார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget