
எதிர்வரும் பெப்ரவரி 10ஆம் திகதி 341 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. வேட்புமனுத் தாக்கல் அனைத்தும் கடந்த 21ஆம் திகதியுடன் நிறைவுக்கு வந்த கையோடு தேர்தல் குறித்த கலந்துரையாடல்களை கிராம மட்டத்தில் கட்சிகள் ஆரம்பித்திருந்தன.
அத்துடன், சிறியளவிலான கூட்டங்களும் நடைபெற்று வருகின்றன. ஜனவரி முதல் பெரியளவிலான கூட்டங்களை நடத்தவுள்ளன.
ஐக்கிய தேசியக் கட்சி தமது பரப்புரைக் கூட்டத்தை தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கண்டியில் ஆரம்பிக்கவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
சுதந்திரக் கட்சியின் தேர்தல் பரப்புரையை இம்முறை அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன கட்சியின் தலைவர் என்ற அடிப்படையில் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச சுதந்திரக் கட்சியில் போட்டியிட்டிருந்ததால் தேர்தல் பரப்புரை நடவடிக்கைகளில் இருந்து அரச தலைவர் மைத்திரி ஒதுங்கியிருந்தார்.
இந்தமுறை மகிந்த ராஜபக்சவின் ஆதரவு அணியால் உருவாக்கப்பட்டுள்ள பொது மக்கள் முன்னணி தனித்துக் களமிறங்கியுள்ளதால் சுதந்திரக் கட்சிக்குப் பெரும் தலையிடியாகியுள்ளது. அதனால் மைத்திரியே நேரடியாகக் களமிறங்கவுள்ளார்.
Post a Comment