Ads (728x90)

காங்கிரஸ் கட்சித் தலைவராக ராகுல் முறைப்படி பதவியேற்று கொண்டார்.

சோனியா, காங்., கட்சித் தலைவராக, 19 ஆண்டுகளாக பதவி வகித்து வருகிறார். சோனியாவின் உடல் நிலை, சமீபகாலமாக அடிக்கடி பாதிக்கப்படுவதால், அவரால் கட்சி பணியாற்ற முடியவில்லை.இதனால், புதிய தலைவராக, அவரது மகனும், கட்சியின துணை தலைவருமான, ராகுலை தேர்ந்தெடுக்க வேண்டும் என, காங்., மூத்த தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர்.வரும், 2019ல், லோக்சபா தேர்தல் நடக்கவுள்ள நிலையில், கட்சித் தலைமை பொறுப்பை, ராகுல் ஏற்க, இதுவே சரியான நேரம் என, அவரது ஆதரவாளர்கள் கூறிவந்தனர்.


இந்நிலையில், காங்., கட்சித் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிப்பு, சமீபத்தில் வெளியானது. இதில் போட்டியிட, ராகுல் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. அதேசமயம், ராகுல் தலைவராக வேண்டும் என, அவரது சார்பில், 89 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அந்த மனுக்கள் அனைத்தும், செல்லத்தக்கவையாக இருந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், காங்., தலைவராக, ராகுல் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக, முறைப்படி அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, இன்று(டிச.,16) நடக்கும் விழாவில், காங்., கட்சித் தலைவர் பொறுப்பை, ராகுல் முறைப்படி ஏற்றுக் கொண்டார். அவரிடம் தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கான சான்றிதழை முள்ளப்பள்ளி ராமச்சந்திரன் வழங்கினார். இந்த விழாவில், முன்னாள் தலைவர் சோனியா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளட்ட மூத்த தலைவர்கள், கட்சி தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ராகுல் தலைவரானதை காங்கிரஸ் தொண்டர்கள் இனிப்புகள் வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.

Post a Comment

Recent News

Recent Posts Widget