Ads (728x90)

திருப்பதிக்கு போகிறவர்கள் ஆன்லைனிலேயே புக்செய்து, அவசரஅவசரமாய் ஏழுமலையான் சந்நிதிக்குள் நுழைந்து தரிசனம் செய்துவிட்டு வந்து விடுகிறார்கள்.

ஆனால், முதலில் நாம் செல்ல வேண்டியது திருச்சானூரிலுள்ள பத்மாவதி தாயார் கோயிலுக்குத் தான். இதை பெருமாளின் திருக்கரமே நமக்கு எடுத்துக்காட்டுகிறது என்கிறார்கள் மகான்கள். அவரது ஒரு கரம் கீழ்நோக்கி இருக்கிறது. என் முகத்தைப் பார்க்கும் முன் திருவடியைப் பார். திருவடியில் சரணாகதி அடை என்று சொல்வது போல் உள்ளதாக சிலர் இதை வர்ணிக்கிறார்கள். 

இன்னொரு சாராரோ, நீ கீழே இருக்கும் லட்சுமியாகிய பத்மாவதியை பார்த்து விட்டு வந்துவிட்டாயா? அவள் சிபாரிசு செய்தால் தான், என் அருள் உனக்கு கிடைக்கும், என்று சொல்வது போல் உள்ளதாக விளக்கம் சொல்கிறார்கள். பொதுவாக, பெருமாள்கோயில்களில் தாயாருக்கு தான் முதல் வணக்கம். பின்பே பெருமாளைச் சேவிக்க வேண்டும் என்பது மரபு.

Post a Comment

Recent News

Recent Posts Widget