சாவகச்சேரி நகர சபை தவிர்ந்த வடக்கில் உள்ள ஏனைய சபைகளுக்கு நாளைமறுதினம் புதன் கிழமையே இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி வேட்புமனுத் தாக்கல் செய்யவுள்ளதாகத் தெரியவருகின்றது.நாடு முழுவதிலும் உள்ள 248 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பமாகவுள்ளது. 21ஆம் திகதி நண்பகல் 12 மணியுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவடையவுள்ளது.
வடக்கில் சாவகச்சேரி நகர சபைக்கான வேட்புமனுத் தாக்கல் ஏற்கனவே நிறைவுற்றுள்ளது. எஞ்சிய சபைகளுக்கான வேட்பு மனுக்களைத் தயாரிக்கும் நடவடிக்கைகள் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பட்டியலை இறுதிப்படுத்தும் நடவடிக்கை இன்று இடம்பெறவுள்ளதாக அறியமுடிகின்றது. இந்த நிலையில் நாளைமறுதினம் புதன் கிழமை வடக்கில் 5 மாவட்டங்களிலும் வேட்புமனுத் தாக்கல் இடம்பெறும் என்று தெரியவருகின்றது.
Post a Comment