
சிவகார்த்திகேயன், பஹத் பாசில், நயன்தாரா இணைந்து நடித்துள்ள 'வேலைக்காரன்' படம் வரும் டிச-22ஆம் தேதி ரிலீஸாகிறது. அனிருத் இசையமைத்துள்ள இந்தப்படத்தை மோகன்ராஜா இயக்கியுள்ளார். இந்தப்படத்தின் கேரளா வெளியீட்டு உரிமையை பிரபலமான ஈ4 என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் மிகப்பெரிய விலைக்கு கைப்பற்றியுள்ளது.
சிவகார்த்திகேயன் படங்களுக்கு கேரளாவில் நல்ல மார்க்கெட் இருந்தாலும் கூட, இந்தப்படத்தை இன்னும் அதிக விலைக்கு வாங்கியதற்கு மிக முக்கியமான காரணங்கள் இதில் மலையாள நடிகர் பஹத் பாசிலும், நாயகியாக நயன்தாராவும் நடித்துள்ளது தான்.
மேலும் 'தனி ஒருவன்' படம் தந்த இயக்குனர் மோகன்ராஜாவின் படம் என்கிற எதிர்பார்ப்பும் இதில் சேர்ந்துள்ளது. இதே நிறுவனம் தான் மலையாளத்தில் பஹத் பாசில் நடித்த இரண்டு தேசிய விருது படங்களையும் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Post a Comment