
அஜித் நடிக்கும் 58-வது படமான விசுவாசம் படத்தையும் சிறுத்தை சிவாவே இயக்க, விவேகத்தை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸே தயாரிக்கிறது. இந்த படத்தின் பூஜை கடந்த வியாழக்கிழமை அன்று சத்தமில்லாமல் நடைபெற்றது. அஜித்தை தவிர்த்து, படத்தில் பணியாற்றும் டெக்னீசியன்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
விசுவாசம் படத்தின் நாயகி யார் என்கிற விவரம் இன்னும் வெளியிடப்படாத நிலையில், தற்போது அப்படத்தில் ஒப்பந்தமாகியுள்ள சில டெக்னீசியன்கள் பற்றிய தகவல்கள் வெளியாகியிருக்கிறது. அதாவது, விசுவாசம் படத்திற்கு இசை - யுவன் ஷங்கர் ராஜா, ஒளிப்பதிவு - வெற்றி, எடிட்டிங் ரூபன் என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.
Post a Comment