
அவர்கள் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாகவும் ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிக்க முடிவெடுத்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு எதிராக கண்டனம் தெரிவித்தனர்.
அமெரிக்க தூதரகம் முன் திரண்டிருந்த போராட்டக்காரர்கள், அமெரிக்க தூதரகமே அல் காட்சிலிருந்து வெளியேறு, ஜெருசலேத்தையும் பாலஸ்தீனர்களையும் சுதந்திரமாக இருக்கவிடு, நாங்கள் பாலஸ்தீனர்களோடு இருக்கிறோம் என்ற வாசகங்கள் தாங்கிய பதாகைகளை ஏந்தியிருந்தனர். அல் காட்ஸ் என்பது அரபு மொழியில் ஜெருசலேம் என்பதை குறிப்பதாகும்.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற போராட்டத்தை இஸ்லாமிஸ்ட் பிராஸ்பெரஸ் ஜஸ்டிஸ் கட்சி ஏற்பாடு செய்திருந்தது. டிரம்ப்பின் வியாழன் அறிவிப்பை தொடர்ந்து இரண்டாவதாக நடைபெறும் போராட்டம் இது.
இந்தோனேசிய அதிபர் ஜோகோ ஜோவாய் விடோடோ, அமெரிக்க அதிபர் டிரம்பின் முடிவுக்கு கடும் கண்டத்தைத் தெரிவித்துள்ளதோடு, ஐ.நா.தீர்மானங்களை மீறும் வகையிலானது என்றும் கூறியுள்ளார்.
இந்தோனேசியா, உலகில் அதிகம் முஸ்லிம்கள் வாழும் நாடு. நீண்டகாலமாகவே பாலஸ்தீனர்களுக்கு உறுதியான ஆதரவாளர்களாக இருப்பவர்கள். அவர்கள் யூத அரசுடன் எந்தவிதமான ராஜதந்திர உறவுகளையும் கொண்டிருக்கவில்லை.
உலக நாடுகள் பலவற்றிலிருந்தும் கண்டனம் எழுந்துள்ள நிலையில் ஐ.நா.வும் அமெரிக்க அதிபரின் முடிவை நிராகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது
Post a Comment