
எதிர்வரும் 15ஆம் திகதி தொடக்கம், 17ஆம் திகதி வரை உணவுத் திருவிழா இடம்பெறவுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது.
வடக்கு மாகாண விடுதிகள் சங்கத்துடன் இணைந்து இராணுவத்தின் யாழ். படைகளின் தலைமையகம் இந்த உணவுத் திருவிழாவை நடத்தவுள்ளது.
யாழ். கோட்டைக்கு முன்பாக நடைபெறவுள்ள இந்தத் திருவிழாவில் இசை நிகழ்ச்சிக ளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வடக்கு– கிழக்கில் இராணுவம் சிவில் மற்றும் வணிகச் செயற்பாடுகளில் இருந்து விலக வேண்டும் என்று பன்னாட்டு அளவில் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருகின்ற நிலையிலும், யாழ்ப்பாண உணவுத் திருவிழா என்ற பெயரில் புதிய வணிக முயற்சியில் இராணுவம் இறங்கியுள்ளது.
Post a Comment