Ads (728x90)

இந்த ஆண்டு பிப்ரவரியில் தெலுங்கில் நாகார்ஜூனா நடிப்பில் வெளியான பக்தி படம் ஓம் நமோ வெங்கடேசாயா. ராகவேந்திரா ராவ் இயக்கிய இந்த படத்தில் அனுஷ்கா நாயகியாக நடித்துள்ளார். தெலுங்கில் வெற்றி பெற்ற இந்த படத்தை டிசம்பர் 29-ந்தேதி அன்று தமிழில் பிரமாண்ட நாயகன் என்ற பெயரில் டப் செய்து வெளியிடுகிறார்கள்.

மேலும், கார்த்தியுடன் இணைந்து தான் நடித்த தோழா படத்திற்கு பிறகு இந்த படமும் தமிழ் ரசிகர்களை வெகுவாக கவரும் என்று நினைக்கும் நாகார்ஜூனா, பிரமாண்ட நாயகன் படத்தின் தமிழ் உரிமையை தானே கைப்பற்றி அதிகப்படியான தியேட்டர்களில் வெளியிடும் வேலைகளில் இறங்கியிருக்கிறார்.

அதோடு, இந்த படத்தின் நாயகி அனுஷ்கா என்பதால், தனது முந்தைய டப்பிங் படங்களை விட கூடுதலாக வசூலிக்கும் என்றும் எதிர்பார்க்கிறாராம் நாகார்ஜூனா.

Post a Comment

Recent News

Recent Posts Widget