நடிகை ரவீனா டன்டாண் கடைசியாக நடித்த ஷாப் படம் பாக்ஸ் ஆபீசில் தோல்வியை தழுவியது. இந்நிலையில் அழகு குறிப்புகளுக்கான வீடியோ பிளாக் ஒன்றை துவக்கி உள்ளார். இதற்கு ப்யூட்டி டாக்கீஸ் எனவும் அவர் பெயரிட்டுள்ளார்.இந்த பிளாக் மூலம் வீடியோ படிவில் தேக பராமரிப்பு குறிப்புக்கள், தான் கடைபிடித்து வரும் அழகு ரகசிய குறிப்புக்கள் ஆகியவற்றையும் ரவீனா வழங்க உள்ளார். இந்த தகவலை உறுதி செய்த ரவீனா, ரசிகர்கள் பலரும் எனக்கு தங்களின் கருத்துக்களை அனுப்புவது மகிழ்ச்சியாக உள்ளது. எனது ரசிகர்கள் என் மீது கொண்டுள்ள அன்பை தெரிந்து கொள்வதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக நான் நினைக்கிறேன்.
தோல் தொடர்பான விஷயங்கள் குறித்து பேச உள்ளேன். அது தொடர்பான கேள்விகளுக்கும் பதிலளித்து, என்னிடம் கேட்பவர்களுக்கு அழகு குறிப்புக்களையும் வழங்க உள்ளது என்றார்.
Post a Comment