
அமெரிக்க ஜிம்னாஸ்டிக்ஸ் அணியின் டாக்டராக இருந்தவர் நசார், 54; மிச்சிகன் மாகாண பல்கலையிலும் பணிபுரிந்தார். இவரால் பாலியல் தொல்லைக்கு ஆளான பெண் அளித்த புகாரையடுத்து, நசாரை, மிச்சிகன் போலீசார் கைது செய்தனர். அதைத் தொடர்ந்து, நசாரால் பாதிக்கப்பட்ட, 150க்கும் மேற்பட்ட இளம் பெண்கள், ஒவ்வொருவராக போலீசில் புகார் அளித்தனர்.
இதையடுத்து, அவரிடம் நடத்திய விசாரணையில், 20 ஆண்டுகளாக, தன்னிடம் சிகிச்சைக்காக வந்த, ஜிம்னாஸ்டிக் மற்றும் தடகள வீராங்கனையருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததையும், சிறுமியரை வைத்து ஆபாச படம் எடுத்ததையும், அவர் ஒப்புக் கொண்டார்.
விசாரணை முடிந்த நிலையில், நேற்று இந்த வழக்கில், மிச்சிகன் மாகாண நீதிமன்ற நீதிபதி, ரோஸ்மேரி அகுலினா பிறப்பித்த உத்தரவு: நீங்கள் எங்கு இருந்தாலும், அங்கு, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையை உருவாக்கியுள்ளீர்கள். சிறுமியர் மீதான ஆபாச பட வழக்கில், 60 ஆண்டும், இளம்பெண்கள் மீதான பாலியல் வன்முறைக்கு, 175 ஆண்டும் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. வாழ்நாள் முழுவதும் சிறை வளாகத்தை விட்டு வர முடியாது. இவ்வாறு நீதிபதி உத்தர விட்டார்.
தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன், ஒலிம்பிக் போட்டியில் ஜிம்னாஸ்டிக் பிரிவில் தங்கப் பதக்கம் பெற்ற வீராங்கனையர், மிச்சிகன் மாகாண பல்கலையில் பணிபுரிந்த போது, பாதிக்கப்பட்ட தடகள வீராங்கனையர் உட்பட அனைவரிடமும், நசார் மன்னிப்பு கேட்டார்
Post a Comment