
இந்தியாவின் 69வது குடியரசு தின விழா தலைநகர் டில்லியில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதில் ஆசியான் நாட்டு தலைவர்கள் கலந்து கொண்டனர். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தேசிய கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர், முப்படையினரின் அணிவகுப்பு நடந்தது. இதனை ஜனாதிபதி, பிரதமர், ஆசியான் நாட்டு தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பார்வையிட்டனர்.
விழாவில் காவி, சிவப்பு மற்றும் பச்சை நிறம் கொண்ட தலைப்பாகை அணிந்திருந்த பிரதமர் மோடி, அணிவகுப்பு முடிந்த பின்னர் மரபுகளை மீறி விழா மேடையிலிருந்து கீழே இறங்கிய அவர், ராஜ்பாத்திற்கு தனது பாதுகாவலர்களுடன் வந்தார். தொடர்ந்து விழாவிற்கு வந்திருந்த மக்கள் அருகில் சென்று, அவர்களை நோக்கி உற்சாகமாக கையசைத்தார். அங்கிருந்த மக்கள் பிரதமரை நோக்கி கையசைத்தனர். பிரதமரை பார்க்க மக்கள் முண்டியடித்தனர். பிரதமருடன் அவரது பாதுகாவலர்களும் உடன் சென்றனர்.
கடந்த சுதந்திர தினத்தின் போதும், பிரதமர் மோடி தேசிய கொடியேற்றி உரையாற்றிய பின்னர், விழாவை பார்க்க வந்த குழந்தைகளிடம் சென்று கை கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
Post a Comment