
அமெரிக்காவின், டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள நியூ ஹாம்ஷயர் பகுதியில், துப்பாக்கிச் சூடு நடந்ததாக, போலீசாருக்கு தகவல் வந்தது. அங்கு சென்ற போலீசார், துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை தேடினர். போலீசிடம் இருந்து தப்பிக்க, ஒரு மறைவான இடத்தில் பதுங்கியிருந்த அந்த நபரை, போலீஸ் நாய் கண்டுபிடித்து, பிடிக்க முயன்றது.
தன் மீது பாய்ந்த நாயை கடித்துக் குதறிய அந்த நபரை, போலீசார் கைது செய்தனர். துப்பாக்கியால் சுட்டது மற்றும் நாயை கடித்ததற்காக, அவர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
Post a Comment