Ads (728x90)

கடந்த பத்து வருட காலப்பகுதியில் வெளிநாட்டு கடனாக பெற்ற பத்து ட்ரில்லியன் ரூபாவை இலங்கை பெற்றுள்ள போதிலும், ஒரு ட்ரில்லியன் ரூபாவுக்கே நிதியமைச்சில் விபரங்கள் உள்ளன. ஒன்பது ட்ரில்லியன் ரூபாவுக்கு என்ன நடந்தது? இதற்கான எந்தவித ஆவணமும் நிதியமைச்சில் இல்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று தெரிவித்துள்ளார்.

இலங்கை மத்திய வங்கி பிணைமுறி விவகாரம் தொடர்பில் விசாரணை செய்யவென நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் நடந்து கொண்டிருந்த போது இடம்பெற்ற சில சம்பவங்கள் தமக்கு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளன. அதேநேரம் நாட்டில் இன, மத, கட்சி அரசியல் பேதங்களுக்கு அப்பால் கொடூர மோசடிக் கும்பலின் கூட்டணியொன்று உருவாகியுள்ளது. அத்துடன் கடந்த மூன்று வருட காலப்பகுதியில் அரசாங்கத்திற்கு நேரடியாக வந்த வருமானங்கள் அரசின் எவ்வித அனுமதியும் இன்றி தனியார் நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன என்றும் இதன் விளைவாக அரசுக்கு பெரும் தொகை வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

இவ்வாறான கொடூர மோசடிக்கார கும்பலுக்கு எதிராக ஊடகங்கள் செயற்பட வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றுக் காலை ஜனாதிபதி மாளிகையில் ஊடகவியலாளர்கள் மத்தியில்  உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget