பிரபாகரன் எச்சந்தர்ப்பத்திலும் சரணடைய விரும்பவில்லை. யுத்தம் நிறைவடைவதற்கு இரு மாதங்களுக்கு முன்னர் அவருடைய தொலைபேசி உரையாடல் ஒன்றை ஒற்றுக் கேட்டோம். அந்த உரையாடல் கே.பி எனப்படும் குமரன் பத்மநாதனுக்கும் பிரபாகரனுக்கும் இடையில் இடம்பெற்றிருந்தது. அதன்போது யுத்தத்தை கைவிடுங்கள், வெளிநாட்டுக்கு ஒன்றிற்கு தப்பிச் செல்லுங்கள், பின்னர் அதற்கான நேரம் வரும்போது நாட்டை மீட்டு எடுப்போம் என குமரன் பத்மநாதன் பிரபாகரனிற்கு ஆலோசனை கூறியிருந்தார். எனினும் இதற்கு பதிலளித்த பிரபாகரன், தன்னால் நிலைமைகளை மாற்ற முடியும், அதற்கு ஆயுதங்கள் தேவை, என்ற கோரிக்கையை முன்வைத்தார். இந்த உரையாடல், எந்த சூழ்நிலையிலும் பிரபாகரனுக்கு சரணடையும் எண்ணம் இருக்கவில்லை என்பதை தமக்கு உணர்த்தி இருந்ததாக கோத்தபாய கூறினார்.
இறுதி யுத்தத்தின் போது 50 பேர் சரணடைய தயாராக இருப்பதாக இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் தூதுவர் எமக்கு அறிவித்திருந்தார். ஆனால் அது குறித்து மேலதிக தகவல்களை அவர் வெளியிடவில்லை எனவும் கோத்தாபய ராஜபக்ஸ குறிப்பிட்டார். இந்த நிலையில் பிரபாகரன் உயிருடன் பிடிக்கப்பட்டதாக பல தகவல்கள் வெளியாகி இருந்தன. அதற்கான வாய்ப்பு எமக்கு கிடைத்திருக்கவில்லை. அவர் உயிரிழந்து விட்டதாக யுத்தகளத்தில் இருந்த இராணுவத்தினரே முதலில் எனக்கு அறிவித்தனர். குறிப்பாக மே மாதம் 16ஆம் திகதி இரவு புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் கடுமையான மோதல் இடம்பெற்றது. இதன்போதே அவர் உயிரிழந்திருக்கலாம் என நம்புகிறோம். அவரை ஒருபோதும் உயிருடன் பிடிக்கவி ல்லை என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய கொழும்பில் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய தனது நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
Post a Comment