
இராஜகிரியவில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
தனது பதவிக்காலம் நிறைவடையும் காலம் எப்போது என்பது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு நன்கு தெரியும். இந்நிலையில் 2015 ஆம் ஆண்டு ஜனவரி 8 திகதி முதல் 2018 ஆம் ஆண்டு ஜனவரி 11 வரையாகும் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்று சுமார் 1098 நாட்கள் நிறைவடைந்து விட்டன. அப்படியாயின் இன்னும் 696 நாட்கள் மாத்திரமே உள்ளன. ஜனவரி 15 ஆம் திகதியாகும் போது ஜனாதிபதி சில விடயங்களை நாட்டு மக்களுக்கு குறிப்பிடலாம். அதாவது தனது ஐந்து வருடங்களில் மூன்று வருடங்கள் நிறைவடைந்து விட்டன. இன்னும் இரு வருடங்களில் எனது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாக கூறலாம்.
இதற்காக அதிரடி நடவடிக்கைகளாக நீதி, சட்டம் ஒழுங்கு ஆகிய அமைச்சுக்களை ஜனாதிபதி தன்வசம் கையகப்படுத்தி கொள்ளலாம். அத்துடன் சட்டமா அதிபர் திணைக்களத்தை தன்கையில் எடுத்துக் கொள்ளலாம். தனக்குள்ள அதிகாரத்தை கொண்டு இவ்வாறு செய்வது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கடினமான ஒன்றல்ல என்றார்.
Post a Comment