Ads (728x90)

பெருமாள் மற்றும் ஆண்டாள் பற்றி தரக்குறைவாக விமர்சனம் செய்த, தி.மு.க., - எம்.பி., கனிமொழி மற்றும் வைரமுத்து மீது போலீசில், பலர் புகார் அளித்து வருகின்றனர்.

சமீபத்தில், திருச்சியில் நடந்த மாநாடு ஒன்றில், தி.மு.க.,வைச் சேர்ந்த, ராஜ்ய சபா, எம்.பி., கனிமொழி, ''திருப்பதி ஏழுமலையானுக்கு சக்தி இல்லை,'' என, பேசியுள்ளார்.

அதேபோல, சினிமா பாடலாசிரியர், வைரமுத்து, திருப்பாவை அருளிய ஆண்டாள் பற்றி, தரக்குறைவாக விமர்சித்துள்ளார். இதற்கு, கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது; வைரமுத்து, மன்னிப்பு கேட்டுள்ளார்.

இந்நிலையில், இந்து முன்னணி நிர்வாகி, முருகேசன் என்பவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், நேற்று புகார் ஒன்றை அளித்துள்ளார்.அதில், 'பெருமாள் மற்றும் ஆண்டாள் பற்றி தரக்குறைவாக பேசி, இந்துக்களின் மனதை புண்படுத்தி உள்ள, வைரமுத்து மற்றும் கனிமொழி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கூறியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக, மேலும் பலரும்புகார் அளித்துஉள்ளனர்.

Post a Comment

Recent News

Recent Posts Widget