
இது தொடர்பாக அவர் அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
எதிர்வரும் புதன்கிழமை (31.01.2018) பி.ப. 4 மணிக்கு காத்தான்குடியில் ஜனாதிபதியின் பிரசன்னத்துடன் இடம்பெறவுள்ள பிரதான கூட்டத்தில் இப்பிரதேசத்தைச் சேர்ந்த அதிகளவான முஸ்லிம்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கின்றோம்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு சிறுபான்மை மக்கள் மத்தியில் நல்ல செல்வாக்கு உள்ளது. அவரை ஆட்சியில் அமர்த்தியவர்கள் சிறுபான்மை சமூகத்தினரே. இந்நிலையில் சிறுபான்மை மக்களின் ஆதரவை மீண்டும் நிருபிக்கின்ற வகையில் காத்தான்குடி கூட்டம் அமையும்.
காத்தான்குடி நகர சபையை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நிச்சயம் வெல்லும்.
அவ்வாறு வெற்றி பெற்றால் அது தேசிய ரீதியில் பேசப்படும் ஒரு முக்கிய பேசுபொருளாக மாறும். அது எமது சமூகத்துக்கும், காத்தான்குடி மக்களுக்கும் ஏராளமான நன்மைகளை பெற்றுத் தரும். ஜனாதிபதி முஸ்லிம்கள் பற்றி சிந்திக்கும் போது காத்தான்குடி மக்கள் தன்னுடன் உள்ளார்கள் என்பதை எப்போதும் மறக்க மாட்டார்” எனத் தெரிவித்துள்ளார்.
Post a Comment