
கைதடி வடக்கு கலைமகள் முன்பள்ளி மற்றும் அம்பிகா முன்பள்ளியும் இணைந்து நடாத்திய வருடாந்த விளையாட்டுப்போட்டி 25/02 அன்று கைதடி குருசாமி வித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது
கைதடி வடக்கு சனசமூக நிலைய தலைவர் கு.அட்சகன் மற்றும் கைதடி வடக்கு அம்பிகா மாதர் சங்கத்தின் திருமதி.மைதிலி ஜெயபவன் தலைமையில் நிகழ்வு நடைபெற்றிருந்தது
இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அவர்களின் தந்தையும் பிரத்தியேக செயலாளருமான சதாசிவம் இராமநாதன் அவர்கள் கலந்துகொண்டு,போட்டி நிகழ்வை ஆரம்பித்து வைத்து,வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்களையும் வழங்கி கௌரவித்தார்
மேலும் இன் நிகழ்வில் கைதடி குருசாமி வித்தியாலய முன்னை நாள் முதல்வர் திருமதி ப.செல்வநாயகம்
இந்நாள் முதல்வர் திரு ந.ஜெயரூபன்,கைதடி முன்பள்ளி இணைப்பாளர் திருமதி சு.தனபாலசிங்கம் மற்றும் கைதடி வடக்கு கிராம அலுவலர் திரு கி.சதீசன் ஆகியோரும் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

Post a Comment