Ads (728x90)

உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில் இந்த முறை ஜெர்மனி அணி கோப்பையை வெல்லும் என்று கம்ப்யூட்டர்கள் ஆரூடம் கூறியுள்ளன.

21-வது உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியை ரஷ்யா வரும் ஜூன் மாதம் பிரம்மாண்டமாக நடத்தவுள்ளது. போட்டிகள் தொடங்க இன்னும் 3 வாரங்கள் உள்ள நிலையில் தற்போதே சாம்பியன் பட்டம் யார் வெல்வார் என்பதை கணிப்பதில் தீவிரம் காட்டப்பட்டு வருகிறது.

ஸ்விட்சர்லாந்தில் உள்ள பிரபலமான யுபிஎஸ் வங்கியானது தன்னிடமுள்ள கம்ப்யூட்டர்களிடம் இந்த ஆண்டு எந்த அணி உலகக் கோப்பையை வெல்லும் என்று கேட்டபோது அவை அலசி ஆராய்ந்தன.

கடந்த 10 ஆயிரம் கால்பந்துப் போட்டிகளின் முடிவுகளைக் கொண்டு கணித்த அந்த கம்ப்யூட்டர்கள் இந்த ஆண்டு ஜெர்மனி அணி கோப்பையை வெல்லும் என்று ஆரூடம் கூறியுள்ளன. ஜெர்மனி ஏன் கோப்பையை வெல்லும் என்பதற்காக 29 பக்க ஆய்வு முடிவுகளையும் அந்த கம்ப்யூட்டர்கள் வெளியிட்டுள்ளன. அந்த ஆய்வுகளின்படி, “கோப்பையை வெல்வதற்கு ஜெர்மனி அணிக்கு 24 சதவீத வாய்ப்புகள் உள்ளன. அதற்கு அடுத்த இடங்களில் பிரேசில், ஸ்பெயின் ஆகிய அணிகள் உள்ளன. இந்த ஆண்டு சாம்பியன் ஐரோப்பிய கண்டத்திலிருந்தோ அல்லது லத்தீன் அமெரிக்காவிலிருந்தோ வரலாம்.

ஆசியா, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள், வட அமெரிக்காவிலிருந்து எந்த அணியும் கோப்பையை வெல்லாது. ரஷ்யா கோப்பையை வெல்ல 1.6 சதவீத வாய்ப்பே உள்ளது. இந்தத் தொடரில் 5 ஆட்டங்கள் உச்சகட்ட பரபரப்பில் இருக்கும். போர்ச்சுக்கல் அணியை ஸ்பெயினும், பெல்ஜியம் அணியை இங்கிலாந்தும் வெல்லும். சிறப்பான அணியே கோப்பையை வெல்லும்” என யுபிஎஸ் வங்கி தெரிவித்துள்ளது.

2014 உலகக் கோப்பையை பிரேசில் வெல்லும் என்று யுபிஎஸ் வங்கி கம்ப்யூட்டர்கள் ஆரூடம் கூறியிருந்தன. ஆனால் அரை இறுதியில் பிரேசில், ஜெர்மனியிடம் மோசமாகத் தோல்வி கண்டது.

Post a Comment

Recent News

Recent Posts Widget