
நாளை ஆரம்பமாகவுள்ள இறுதி 16 அணிகள் சுற்றில் தோல்வியடையும் அணிகள் தொடரிலிருந்து நீக்கப்படும் அதேவேளை, வெற்றியீட்டும் அணிகள் காலிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெரும்.
இதேவேளை, இறுதி 16 அணிகள் சுற்றுக்கு தெரிவான ஒரேயொரு ஆசிய நாட்டு அணியாக ஜப்பான் உள்ளது. எதிர்வரும் ஜூலை 02ம் திகதி பெல்ஜியம் அணியுடன் ஜப்பான் மோதவுள்ளது.
மேலும், நடப்பு சாம்பியனான ஜேர்மன் அணி இறுதி 16 அணிகள் சுற்றுக்கு தகுதி பெறாமலேயே தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.
இறுதி 16 அணிகள் சுற்றை அடுத்து, காலிறுத்திச்சுற்றுப் போட்டிகள் ஜூலை 06ம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது. (நு)
இறுதி 16 அணிகள் சுற்று போட்டி விபரம் :
ஜூன் 30
1. ஆஜன்டீனா மற்றும் பிரான்ஸ்
2. உருகுவே மற்றும் போர்த்துக்கல்
ஜூலை 01
1. ஸ்பெய்ன் மற்றும் ரஷ்யா
2. குரோஷியா மற்றும் டென்மார்க்
ஜூலை 02
1. பிரேசில் மற்றும் மெக்சிகோ
2. பெல்ஜியம் மற்றும் ஜப்பான்
ஜூலை 03
1. சுவீடன் மாறட்டும் சுவிச்சர்லாந்து
2. கொலம்பியா மற்றும் இங்கிலாந்து
Post a Comment