
பொலன்னறுவையிலுள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு நேற்று இடம்பெற்றது.
பாதுகாப்பு பணிக்குழாம் அதிகாரி அட்மிரல் ரவீந்ர விஜேகுணரத்னவின் அழைப்பின் பேரிலேயே ஜெனரல் சுபைர் மஹ்மூத் ஹயாட் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.
பாகிஸ்தானுக்கும் இலங்கைக்குமிடையில் இடம்பெறும் இராணுவ பயிற்சி நடவடிக்கைகள் குறித்து இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், முப்படைகளையும் சேர்ந்த சிரேஷ்ட அதிகாரிகளின் பயிற்சிக்காக கொள்ளுப்பிட்டியில் நிர்மாணிக்கப்பட்டுவரும் பாதுகாப்பு கல்லூரிக்கு வழங்கிவரும் உதவிகள் குறித்து ஜனாதிபதி பாகிஸ்தான் பாதுகாப்பு பணிக்குழாம் அதிகாரிக்கு நன்றி தெரிவித்தார்.
இக்கல்லூரிக்கு நிபுணத்துவம் வாய்ந்த விரிவுரையாளர்களை அனுப்புவதற்கு பாகிஸ்தானின் பாதுகாப்பு பணிக்குழாம் அதிகாரி ஜனாதிபதியிடம் இணக்கம் தெரிவித்தார்.
ஜெனரல் சுபைர் மஹ்மூத் ஹயாட் பாகிஸ்தானின் 17வது பாதுகாப்பு பணிக்குழாம் அதிகாரி ஆவார். இவர் பாகிஸ்தான் இராணுவத்தின் சிரேஷ்ட அதிகாரியுமாவார்.
இந்த நிகழ்வில் இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் கலாநிதி ஷாஹிட் அஹ்மட் ஹஸ்மத்தும் கலந்துகொண்டார்.
Post a Comment