
மன அழுத்தத்தில் தவிப்பவர்கள் அதில் இருந்து விடுபட அனுஷ்கா ஆலோசனை கூறியிருக்கிறார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:–
எல்லோருக்கும் மன உளைச்சல் வருகிறது. இதனால் பலர் துவண்டு போகிறார்கள். அதுமாதிரி உணர்வுகள் ஏற்படும்போது அதில் இருந்து வெளியே வர 5 பேருக்கு உதவி செய்யுங்கள். பண உதவிதான் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆறுதலான வார்த்தைகள் சொல்லலாம். அரவணைக்கலாம்.
இப்படி செய்யும்போது மன உளைச்சல் விலகும். மனதுக்குள் பெரிய மாற்றம் உருவாகும். மன அழுத்தம், பிரச்சினையில் சிக்குபவர்கள் விரக்தியாகவே இருப்பார்கள். தனக்கு வரும் சிறிய கஷ்டங்களை கூட பூதக்கண்ணாடி வைத்து பார்ப்பார்கள். அதில் இருந்து தப்பிக்க மற்றவர்களுக்கு உதவுங்கள்.
அவர்களின் கஷ்டங்களை காது கொடுத்து கேளுங்கள். அப்போது நம்முடைய கவலைகள் சிறியதாக தோன்றும். இதை நான் கடைபிடித்து வருகிறேன். எனக்கு மன அழுத்தம் ஏற்படும்போதெல்லாம் மற்றவர்களுக்கு உதவிகள் செய்து அதில் இருந்து மீள்கிறேன். இவ்வாறு அனுஷ்கா கூறினார்.
Post a Comment