Ads (728x90)

சீனாவின் வடக்கு  இன்னர் மங்கோலியாவில் வானத்தில் மேகத்தின் நடுவில் நிலா இருந்த காட்சி பார்ப்பதற்கு கண் போல இருந்துள்ளது. இந்த காட்சியை பெண்ணொருவர் வீடியோவாக எடுத்த நிலையில், அது கடவுளின் கண் என கூறினார்.

இதையடுத்து இந்த செய்தி தீயாக மற்ற இடங்களுக்கு பரவியது. ஆனால் வானத்தில் ஏற்பட்ட  இந்நிகழ்வு குறித்து இயற்கை ஆய்வாளர்கள் இதுவரை விளக்கமளிக்கவில்லை.

அதே சமயத்தில் இது போன்ற விசித்திரமான இயற்கை நிகழ்வு ஏற்கனவே முன்னர் ஏற்பட்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர். அதாவது, கடந்த நவம்பரில் வானத்தில் மூன்று சூரியன்கள் தெரிந்ததாக தெரியவந்துள்ளது. ஆனால் குளிர்காலத்தில் இது போன்ற நிகழ்வுகள் ஏற்படும் என அப்போது ஆய்வாளர்கள் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Recent News

Recent Posts Widget