கூட்டுறவுத்துறையின் முன்னேற்றத்திற்காக எதிர்வரும் ஒரு சில மாதங்களில் முக்கிய தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும் என இன்று மட்டக்களப்பு வெபர் விளையாட்டரங்களில் இடம் பெற்ற 96 ஆவது தேசிய சர்வதேச கூட்டுறவு தின நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துதெரிவிக்கும் போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், கூட்டுறவுத்துறையின் நிபுணர்களின் கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகளை கருத்திற்கொண்டு இந்த நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளோம். அந்த வகையில் கூட்டுறவு இயக்கத்தில் உள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கு குறித்த அமைச்சு மற்றும் தேசிய கூட்டுறவு சபையுடன் இணைந்து மிகவும் செயற்திறன் வாய்ந்த நிகழ்ச்சித் திட்டத்தை மேற்கொள்ளவுள்ளோம் என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment