Ads (728x90)

தமிழில் நேரடிப் படமாகவும், ஹிந்தி, தெலுங்கில் டப்பிங் படங்களாகவும் வெளிவந் 2.0 படம் தமிழ்நாட்டை விட ஹிந்தி பேசும் மாநிலங்களிலும், தெலுங்கு பேசும் மாநிலங்களிலும் நல்ல வசூலை கொடுத்துக் கொண்டிருக்கிறது.

தமிழில் டப்பிங் படமாக வெளிவந்த 'பாகுபலி 2' படம் தமிழ்நாட்டில் வரலாற்று வசூல் சாதனையை நிகழ்த்தியது. ஆனால் தமிழ் ரசிகர்களுக்காக எடுக்கப்பட்ட 2.0 படம் 'பாகுபலி 2' படத்தின் வசூலை முறியடிக்க வாய்ப்பில்லை.

உலகம் முழுவதும் நான்கே நாட்களில் 400 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக படத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இதில் ஹிந்தியில் மட்டும் இப்படம் 100 கோடி ரூபாய் வசூலை இன்றைக்குள் எட்டிவிடும். கடந்த நான்கு நாட்களில் படம் வெளியான வியாழனன்று 20 கோடி, வெள்ளிக்கிழமை 18 கோடி, சனிக்கிழமை 24 கோடி, ஞாயிற்றுக் கிழமை 34 கோடி என படத்தின் வசூல் சனி, ஞாயிறில் அதிகரித்து 96 கோடியைத் தொட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கூட இந்த நான்கு நாட்களில் 100 கோடியைத் தொட்டிருக்க வாய்ப்பில்லை. இருப்பினும் இந்த வார இறுதி வரை இந்தப் படம் தாக்குப் பிடித்தால் வசூல் வேட்டையைத் இன்னும் தொடரலாம்.

Post a Comment

Recent News

Recent Posts Widget