
மழையை தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 235 ரன்கள் மட்டுமே எடுத்து 15 ரன்கள் பின்தங்கியுள்ளது.
பொதுவாக மைதானத்தில் வீரர்கள் தங்களை புத்துணர்வாக வைத்துக்கொள்ள நடனமாடுவது வழக்கம். மைதானத்தில் ஆக்ரோஷமான மற்றும் இலக்கே குறி என விராட் கோலி இருந்தாலும் அவ்வப்போது அவர் செய்யும் சில விஷயங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகும்.
அதுபோல் தற்போது அவர் 3-ம் நாள் ஆட்டத்தில் ஸ்லிப்பில் ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த திடீரென நடனம் ஆடினார். அது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. இந்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
Post a Comment