Ads (728x90)

தேசிய முதலீட்டாளர்களை ஊக்குவிக்கும் செயற்பாட்டை எந்தவித பிரச்சினைகளும் இன்றி மீண்டும் நடைமுறைபடுத்துவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தேசிய முதலீட்டாளர்களுக்கும், பிரதமருக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று இடம்பெற்றது.

பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போதே, பிரதமர் இதனை தெரிவித்துள்ளதாக, அந்த அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இதன்போது நுகர்வோருக்கு விற்பனை செய்யப்படும் குளிர்பானங்கள் மற்றும் பழங்களினால் தயாரிக்கப்படும் குளிர்பானங்களில் சீனிக்காக அறவிடப்படும் வரியையும் குறைப்பதற்கான, பணிப்புரை ஒன்றை பிரதமர் நிதியமைச்சின் செயலாளருக்கு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, பழங்களில் தயாரிக்கப்படும் குளிர்பானங்களில், சீனி கிராம் ஒன்றுக்காக அறவிடப்படும் 50 சதமான வரியை 30 சதமாக குறைக்கவும் பிரதமரினால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் குளிர்பானங்களின் விலைகள் 30 சதவீதத்தினால் குறைவதற்கான சாத்தியங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget