நாட்டு அரசியலில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலைமை, மக்களின் பொது வாழ்க்கைக்கு எந்தவித அச்சுறுத்தலையும் ஏற்படுத்த வழியமைக்கக் கூடாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வேண்டுகோள் விடுத்துள்ளார்.பொது மக்களுக்கான சேவையை எந்த வித தடையும் இன்றி முன்னெடுக்குமாறு அரச அதிகாரிகளை தான் கேட்டுக் கொள்வதாகவும் ஜனாதிபதி கேட்டுக் கொண்டார்.
கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்கள ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
Post a Comment