நீதிமன்றத்தின் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அனைத்து உறுப்பினர்களும் அதனை ஏற்று அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இடம் பெற்ற கட்சியின் மத்திய செயற்குழு கூடத்தின் போது வலியுறுத்தியுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் ரோஹாண லக்ஷ்மன் பியதாஸ குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இணைந்து ஒரே கூட்டணியாக செயற்பட்டாலும் அதன் தலைமைத்துவத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே வகிப்பார். எனினும் மஹிந்தராஜபக்ஷ அனைத்து விடயங்களிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து செயற்பாடுவார் எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
சுதந்திர கட்சி காரியாலயத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் ரோஹண லக்ஷ்மன் பியதாஸ இதனைத் தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment