Ads (728x90)


தமிழ் சினிமாவில் இப்போதைய இளம் நடிகர்களில் மற்றவர்களை முந்திக் கொண்டு முன்னேறி தனக்கென ஒரு தனி இடத்தை உருவாக்கியவர்களில் தனுஷ் முதன்மையாக இருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். தயாரிப்பு, இயக்கம், நடிப்பு என அவருடைய திறமையை வேறு ஒரு வளர்ச்சியை நோக்கி அழைத்துச் சென்றுவிட்டார்.

ரஜினி - கமல், அஜித் - விஜய் என்ற போட்டிக் கூட்டணி வரிசையில் இப்போதைக்கு தனுஷ் இணைந்துவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். அவருடன் போட்டி போடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சிம்பு கொஞ்சம் பின்தங்கியே இருக்கிறார்.

'வட சென்னை' படத்தை அடுத்து தனுஷ் நடித்து டிசம்பர் 21ம் தேதி வெளிவர உள்ள 'மாரி 2' படத்திற்கான எதிர்பார்ப்பு எப்படி இருக்கிறது என்பது அந்தப் படத்தின் 'ரௌடி பேபி, டிரைலர்' ஆகிய வீடியோக்களிலிருந்து புரிந்து கொள்ளலாம். அடுத்தடுத்து வெளியான அந்த இரண்டு வீடியோக்களும் இப்போது யு டியுபில் 1 கோடியே 20 லட்சம் பார்வைகளைக் கடந்து ஹிட்டாகியுள்ளன. அதிலும் குறிப்பாக 'மாரி 2' டிரைலர் ஒரே நாளில் 1 கோடி பார்வைகளைக் கடந்து தனுஷுக்கு சாதனையை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

டிசம்பர் 21 போட்டியில் வியாபார ரீதியில், தற்போதைய நிலவரப்படி 'மாரி 2' தான் முன்னணியில் இருப்பதாக கோலிவுட் வட்டாரங்களிலும் தெரிவிக்கிறார்கள்.

Post a Comment

Recent News

Recent Posts Widget