
கொட்டாஞ்சேனை - ஜிந்துபிட்டியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 'குரூஸ்' என்று அழைக்கப்படும் என்டன் மைக்கல் என்ற போதைப்பொருள் வர்த்தகரொருவரே காயமடைந்துள்ளார் என தெரியவந்துள்ளது.
அவர் தற்போது கொழும்பு தேசிய மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான குறித்த நபருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் போதைப்பொருள் வியாபாரம் தொடர்பில் பல வழக்குகள் விசாரணையில் உள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
அதன்படி , போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் நிலவிய தகராறு காரணமாக இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
காயமடைந்த நபர் முச்சக்கரவண்டியில் அவரது மனைவியுடன் சென்றுக்கொண்டிருந்த போது உந்துருளியில் வந்த இருவர் இந்த துப்பாக்கிப்பிரயோகத்தை மேற்கொண்டு தப்பிச் சென்றதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
Post a Comment