Ads (728x90)

இசுறுபாயவில் உள்ள கல்வி அமைச்சு அலவலகத்திற்கு முன்னால் இலங்கை ஆசிரியர் சேவை ஒன்றியத்தினரால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படுகின்றது.

இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தினை தடுத்து நிறுத்தும் நோக்கில் பொலிசாரினால் ஆர்பாட்டக்காரர்கள்மீது நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த 22 வருடங்களாகத் தாம் எதிர்நோக்கி வரும் சம்பளப் பிரச்சினைக்குத் தீர்வு வழங்குதல், 30 மாதங்களாக நிலுவையிலுள்ள சம்பளத்தை வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைத்தே ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக, பத்தரமுல்ல - பெலவத்த பிரதேசத்தில், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Recent News

Recent Posts Widget